Wednesday, September 19, 2018

Mudra science for Thyroid Balance.


www.supremeholisticinstitute.com                                         தைராய்டு கோளாறுகள்:

1. முதல் படத்தில் காட்டியுள்ள முத்திரையை இரண்டு கைகளிலும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பாகத்தின் மேட்டுப்பகுதியில் வையுங்கள். மற்றவிரல்களை நேராக நீட்டி வைக்கவும்.
2. இரண்டாம் படத்தில் காட்டியுள்ள முத்திரையை இடது கை உள்ளங்கையில் வலது கை கட்டை விரலை வைத்து இடது கையால் மூடிக்கொள்ளவும். பின்பு இடது கை கட்டைவிரலின் முனையில் வலது கை ஆள்காட்டி விரல் முனையை சேர்த்துவிட்டு மற்ற விரல்களை இடது கை மீது அணைத்து வைக்கவும்.
3. மூன்றாம் படத்தில் காட்டியுள்ள முத்திரையை இரண்டு கைகளிலும் கட்டை விரல் மற்றும் நடுவிரல் முனைகளை சேர்த்து நடுவிரல் மீது ஆள்காட்டி விரலால் அழுத்தம் குடுக்கவும், மற்ற விரல்களை நீட்டிக்கொள்ளவும்.

பலன்கள்;

தைராய்டு சம்பந்தம்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும், தைராய்டு சுரப்பி அருமையாக வேலை செய்யும். உடல் பருமனை குறைக்கும், தொண்டை பிரச்சினைகளை குணமாக்கும்.
இந்த முத்திரைகளை ஒவ்வொன்றையும் 20 நிமிடம் தினமும் இரண்டு வேளை செய்யவும்.

1. முத்திரைகளை நடந்து கொண்டு செய்யக்கூடாது.
2. முத்திரைகளை அமர்ந்த நிலையிலும் படுத்திருக்கும் நிலையிலும்
செய்யலாம்.
3. உணவுக்கு முன்பும் பின்பும் 30 நிமிட இடைவெளி அவசியம்.
4. குளிப்பதற்கு முன்பும், பின்பும் 30 நிமிட இடைவெளி அவசியம்.
5. உங்களது மனம் எதற்காக முத்திரை செய்கிறோம் என்பதில்
கவனமாக இருக்க வேண்டும்.
6. பெண்கள் மாதவிடாய் காலங்களில் முத்திரை செய்யலாம்.
7. குறிப்பிட்ட கால அளவு மட்டுமே முத்திரைகளை செய்ய
வேண்டும்.
8. முத்திரைகள் அனைத்தையும் இரண்டு கைகளிலும் செய்ய
வேண்டும்.